விஜயகாந்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அஞ்சலி

கரூரில் மறைந்த தலைவருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது;

Update: 2023-12-29 08:24 GMT

விஜய்காந்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அஞ்சலி

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் உடல்நல குறைவால் நேற்று காலமானார். அவருக்கு தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள், ரசிகர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்களது அஞ்சலியை ஆங்காங்கேயும் நேரில் சென்றும் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கரூரில் செயல்படும் ஆனந்தம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில், கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பு, மறைந்த கேப்டன் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி தங்களது இதய அஞ்சலியை செலுத்தினர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் ஆனந்தம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க மாவட்டத் தலைவர் பாபு, மாவட்ட செயலாளர் செல்லப்பா, நகர பொருளாளர் பாலாஜி, நகர செயலாளர் பூபதி, மாற்று திறனாளிகள் நல சங்க உதவியாளர் வி வி கார்மெண்ட்ஸ் வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இதே போல வெங்கமேடு பேருந்து நிறுத்தம் அருகேயும், ரெட்டிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகேயும் இதே போல மறைந்த புரட்சி கலைஞர் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி தங்களது இதய அஞ்சலியை செலுத்தினர்.

Tags:    

Similar News