வாஞ்சிநாதன் நினைவு தினம்: தேசிய பேரவை சார்பில் அஞ்சலி

விடுதலைப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 113ஆவது நினைவு தினத்தையொட்டி, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலைய சந்திப்பில் தூத்துக்குடி தேசிய பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2024-06-19 01:40 GMT

தேசிய பேரவை சார்பில் அஞ்சலி

ஆங்கிலேய அரசாங்கத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை 1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து சுட்டுக் கொன்று, அதன்பின் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு வீரமரணம் எய்திய விடுதலைப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 113ஆவது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் களத்தில் விலைமதிக்க முடியாத நிகழ்வாக உருவெடுத்த மணியாச்சி ரயில் நிலைய சம்பவத்தில், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலைய அருகே உள்ள மணிமண்டபத்தில் வாஞ்சிநாதனின் உருவப்படத்திற்க்கு தூத்துக்குடி தேசிய பேரவை சார்பில் மகிளா காங்கிரஸ் மாநில துணைத் தலைவி கனியம்மாள் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில். அந்தோணி மிக்கல், சுந்தரம், ராஜா சாலமன், ஸ்டெல்லா ராஜா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News