புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு நினைவஞ்சலி

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு அஞ்சலி செலுத்தினார்.

Update: 2024-02-15 07:21 GMT

நினைவஞ்சலி 

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், முன்னாள் மத்திய ஆயத காவல் படை சங்கம் சார்பாக, 2019 ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது நடைபெற்ற புல்வாமா தீவிரவாத தாக்குலில்  உயிரிழந்த வீரர்களுக்கு 5 ம் ஆண்டு நினைவை முன்னிட்டு வீர மரணம் அடைந்த 40 சீ. ஆர். பி. எப். வீரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Tags:    

Similar News