வாசுதேவநல்லூர் அருகே பைக் மீது லாரி மோதல் வாலிபர் இருவர் பலி
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் இருவர் உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள திருமலாபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் விக்னேஷ் (வயது 27), இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மகன் ராஜ்குமார் (எ) குல்லா அலி (28) என்பவரும் நேற்று பைக்கில் சிந்தாமணிப் புதூர் பஸ் ஸ்டாப் அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே எதிரே வந்த லாரி திடீரென பைக் மீது மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
ராஜ்குமார் படுகாயமடைந் தார். அவர் சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் செல்லும் வழியி லேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் சண்முகசுந்தரம், சண்முக லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத் திய லாரி டிரைவர் மேல திருவேட்டநல்லூர் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த மாரி பாண்டி மகன் சிவனையா (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.