சாலை விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு - காவல்துறையினர் விசாரணை

காரிமங்கலம் அருகே உருளைக்கிழங்கு பாரம் ஏற்றி வந்த லாரி கண்டைனர் லாரி மீது மோதி விபத்து ஓட்டுநர் உயிரிழப்பு.

Update: 2024-03-22 02:20 GMT

காவல்துறை விசாரணை


சேலம் மாவட்டம், காடையாம் பட்டி சந்தைபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் மகன் மணி லாரி ஓட்டுநர் , இவர் நேற்று கர்நாடக மாநிலம் கேஜி எப் பகுதியில் இருந்து, லாரியில் உருளைக் கிழங்கு லோடு ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் புறப்பட்டார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காரிமங்கலம் வட்டம் பென்னேரி பகுதியில் வந்த போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற கன்டெய்னர் லாரி மீது, உருளைக்கிழங்கு லாரி மோதியது. இதில், படுகாயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த காரிமங்கலம் காவல்துறையினர் மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News