லாரி ஓட்டுனர்கள்,உரிமையாளர்கள் நல சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
மேலூர் பேருந்து நிலையம் அருகே லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலூர் பேருந்து நிலையம் அருகே லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே, மேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வாகன சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ( "BNS - 106/HIT AND RUN" ) பாரதீய நியாய சன்ஹிதா - கிட் அண்ட் ரன் சட்டத்தால், வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், இச்சட்டத்தால் , தங்களுடைய வாழ்வாதாரம் மற்றும் குடும்பத்தினர் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி. மத்திய அரசுக்கு எதிராகவும், இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது...