புதிய வாகன விபத்து சட்டத்திற்கு லாரி ஓட்டுனர்கள் எதிர்ப்பு
புதிய வாகன விபத்து சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என லாரி ஓட்டுனர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Update: 2024-01-04 03:13 GMT
நெடுஞ்சாலை மற்றும் தொலைதூர சாலைகளில் ஹிட் அண்ட் ரன் எனப்படும் லாரிகள் மூலம் விபத்து ஏற்படுத்திய பின் ஓட்டுநர்கள் அப்பகுதியில் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்து பத்தாண்டு சிறை தண்டனையும் 7 லட்சம் அபராதம் விதிக்கும் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் லாரி ஓட்டுநர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரவு தற்காலிகமாக இந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டாலும் இதற்கு நிரந்தர முடிவு வேண்டுமென இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் நீலகிரி லாரி ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் இந்த மசோதாவை அமல்படுத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.