லாரி -அரசு பேருந்து -கார் மோதி விபத்து : 21 பேர் காயம்

பரமத்தி அருகே அதிகாலையில் லாரி மீது அரசு பேருந்தும், பேருந்து மீது காரும் மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2024-06-10 08:13 GMT

விபத்துக்குள்ளான வாகனங்கள் 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே சுமார் 50 டன் எடை கொண்ட கல்லை ஏற்றி ஏற்றுக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியின் பின்னால் சேலத்திலிருந்து நாற்பது பயணிகளுடன் மதுரை நோக்கிச் சென்ற அரசு விரைவு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் பின்னால் மோதியது.

தொடர்ந்து பேருந்தின் பின்னால் வந்த ஆந்திர மாநிலம் குப்பத்திலிருந்து மதுரை அடுத்துள்ள உசிலம்பட்டிக்கு சென்று கொண்டிருந்த கார் பேருந்தின் பின் பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உட்பட பேருந்தில் இருந்த பயணிகள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் இதில் பேருந்து ஓட்டுனர் நடத்துனர் உட்பட ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் கால்கள்,மண்டை உடைந்து படுகாயம் அடைந்த நிலையில் அனைவரும்108, தனியார் ஆம்புலன்ஸ்மூலம் மீட்கப்பட்டு பரமத்திவேலூர் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காரில் பயணித்த பாண்டியன் குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேரும் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News