என் கணவர் மக்களோடு இருந்தது தான் அதிகம் - அனுராதா தினகரன்
எனது கணவர் என்னோடு இருந்ததை விட தேனி மக்களோடு இருந்ததுதான் அதிகம் என தேனி வேட்பாளர் டிடிவி தினகரனின் மனைவி அனுராதா தேர்தல் பிரசாரத்தின் போது பேசினார்.
. தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதி என்டிஏ கூட்டணி வேட்பாளராக டிடிவி.தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
அவரை ஆதரித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அன்னம்பாரிபட்டி பகுதியில் அவரது மனைவி அனுராதா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது : 14 வருடங்களுக்கு பிறகு உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அந்த அளவிற்கு உங்களுடைய பிரியம் பாசம் எல்லாம் என்பது வரவேற்கும் போது என்னால் காண முடிகிறது. தேனி பகுதியில் அவருடன் பிரச்சாரத்திற்கு ஆவலுடன் நானும் சென்று இருந்தேன.; அப்போது போடி பகுதியில் பொதுமக்கள் வந்து விட்டீர்களா நீங்கள் வந்ததே போதும். நீங்கள் வரணும் என்று நாங்கள் காத்திருந்தோம்.
நாங்கள் உங்களிடம் எதுவும் கேட்கவில்லை .நீங்கள் வந்ததே போதும் .நீங்கள் அவரை மனதில் எந்த இடத்தில் வைத்துள்ளீர்கள். கடவுள் அவரை உங்களிடம் வந்து சேர்த்துள்ளார் நாங்கள் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும்.மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருக்கும் தேனி வந்தவுடன் ரொம்ப சந்தோசம். 14 வருட இடை வெளியே இல்லாத பாசம். நாங்கள் மிகவும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். எனக்கு அவரைப் பற்றி மனைவியாக தெரிந்ததை விட உங்களுக்கு எவ்வளவு தெரிந்து உள்ளது. மக்கள் அவரைப் பற்றி சொல்லும் பொழுது எனக்கு பெருமையாக உள்ளது. அவர் உங்க வீட்டு பிள்ளையாக சகோதரனாக இருந்துள்ளார்.
அவர் அதை செய்வார். இதை செய்வார் என்று சொல்வதை விட என்னை விட உங்களுக்கு கேட்க அதிக உரிமை உள்ளது. உங்களோடுதான் 10 வருடங்களாக வாழ்ந்துள்ளார். அதற்காக அவர் உங்களுக்கு அதை பண்ணுவார் இதை பண்ணுவார் என சொல்லத் தேவையில்லை. நான் வரும் ஒவ்வொரு இடங்களிலும் அவர் செய்ததை ஒவ்வொருவரும் சொல்லும் பொழுது அவர் பாராளுமன்ற உறுப்பினராக பத்து வருடங்கள் இருந்த பொழுதும் எனக்கு பெருமையாக உள்ளது. அவர் தற்போது குக்கர் சின்னத்தில் நிற்கின்றார.; மறந்துவிடாதீர்கள். இங்கே வெளியில் வர முடியாத பல பெரியவர்கள் உள்ளனர். அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அவர் நிற்பது குக்கர் சின்னத்தில் ஒரு வாக்கு கூட குறையாமல் சிந்தாமல் சிதறாமல் குக்கர் சின்னத்தில் வாக்களித்து உங்க வீட்டு பிள்ளைக்கு கொடுக்கக்கூடிய வெற்றி அது என என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதை என்னுடைய ஆசை எனக் கூறினார்.