விழுப்புரம் ரெயில் நிலையத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்...

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் காவல்துறை சிறுவர், சிறுமியர் மன்றம் மற்றும் தனியார்மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து காசநோய் விழிப்புணர்வு முகாமை நடத்தியது.

Update: 2024-04-01 10:18 GMT

விழிப்புணர்வு 

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் காவல்துறை சிறுவர், சிறுமியர் மன்றம் மற்றும் தனியார்மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து காசநோய் விழிப்புணர்வு முகாமை நடத்தியது. இதற்கு ரெயில்வே மருத்துவ அலுவலர் ஞானாநந்தம் தலைமை தாங்கி னார். சுகாதார ஆய்வாளர் ஷாலினி, ரெயில்வே நிலைய அலுவலர் சக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சாய்சந்தோஷினி, ரஞ்சித், ராஜலட்சுமி, தெய்வசுந்தரி ஆகியோர் கலந்துகொண்டு ரெயில்வே தொழிலாளர்கள் மற்றும் பயணிகளுக்கு காசநோய் பரிசோதனை செய்ததோடு நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். இந்த முகாமில் ரெயில்வே தொழிலாளர்கள், பயணிகள் 50- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
Tags:    

Similar News