மதுரை ரயில் நிலையம் முன்பு காசநோய் விழிப்புணர்வு பேரணி

மதுரை ரயில் நிலையம் முன்பு காச நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ பேரணி நடைபெற்றது.

Update: 2024-02-27 07:02 GMT

இரயில் நிலையம் முன்பு காசநோய் விழிப்புணர்வு ஆட்டோ பேரணி மார்ச் 24 உலக காசநோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது . காச நோய் குறித்து சுகாதாரத் துறை மற்றும் சமூக அமைப்புகள் மூலம் அவ்வப்போது பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் மதுரை ரயில் நிலையம் முன்பு பிளாசம் அறக்கட்டளை சார்பாக அறக்கட்டளையின் இயக்குனர் மெர்சி அன்னபூரணி தலைமையில் ஆட்டோ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை காசநோய் பிரிவு துணை இயக்குனர் ராஜசேகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ரயில் நிலைய ஆட்டோ சங்கத் தலைவர் ஆறுமுகசாமி தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் ஆட்டோகளில் விழிப்புணர்வு பதாகைகள ஏந்தி கொண்டு பேரணியாக சென்றனர். இந்நிகழ்வில் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் ராஜ்குமார் மற்றும் பிளாசம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News