செட்டிகுறிச்சியில் காசநோய் கண்டறியும் முகாம்

செட்டிகுறிச்சியில் சர்க்கரை நோயாளிகளுக்கு இரண்டு கட்டமாக காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-14 16:52 GMT

காசா நோய் கண்டறியும் முகாம் 

தூத்துக்குடி மாவட்டம் செட்டிகுறிச்சியில் சர்க்கரை நோயாளிகளுக்கு இரண்டு கட்டமாக காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக செட்டிகுறிச்சியில் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பு காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

இம் முகாமில் கலந்து கொண்ட நபர்களுக்கு இரண்டு கட்டமாக காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது. முதற்கட்டமாக முகாமில் கலந்து கொண்ட நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கபட்டது. பின்னர் இரண்டாம் கட்டமாக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு எக்ஸ்ரே பரிசோதனை மூலமாக காசநோய் பாதிப்பு உள்ளனவா பரிசோதனை செய்யப்பட்டது. இம் முகாமிற்கு செட்டிகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி கிருஷ்ணசாமி அனைவரையும் வரவேற்றார்.

காசநோய் முகாமை மருத்துவ அலுவலர்கள் ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் விஜயகுமார் ஆகியோர் தலைமையேற்று காசநோய் பரவும் விதம், காசநோய் அறிகுறிகள் போன்றவைகளை தெளிபடுத்தினார்கள். மேலும் இம் முகாமில் மாவட்ட நலக்கல்வியாளர் (காசம்) முத்துக்குமார் காசநோய் பரிசோதனை முறைகளை கூறினார். மேலும் இம் முகாமில் கயத்தாறு துறை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துபாண்டி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராம கிருஷ்ணன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், கிராம சுகாதார செவிலியர் அக்கம்மாள், முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தனசெல்வி சோபியா, சுகாதார ஆய்வாளர் தினேஷ், ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் இடைநிலை சுகாதார பணியாளர்கள் அனுசுயா, பவுல்வென்சி மேரி, பாக்கியலட்சுமி மற்றும் தன்னார்வலர் மகேஸ்வரி,நுண் கதிர் வீச்சாளர் எட்டய்யா மற்றும் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

   சளி மாதிரிகள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது இம்முகாமில் கலந்து கொண்ட அனைத்து நபர்களுக்கும் உயர் இரத்த அழுத்த பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி கிருஷ்ணசாமி மற்றும் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்

Tags:    

Similar News