தூத்துக்குடி : டிச.9 ல் தேசிய மக்கள் நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 9ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

Update: 2023-12-07 04:50 GMT

தேசிய மக்கள் நீதிமன்றம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 9ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 09.12.2023 அன்று முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர், ஶ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரம் தாலுகா நீதிமன்றம் உட்பட 13 அமர்வுகளில் சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது. மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்காடிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News