சேலத்தில் மின்சாரம் தாக்கி டி.வி. மெக்கானிக் பலி

சேலத்தில் மின்சாரம் தாக்கி டி.வி. மெக்கானிக் பலியானர்.

Update: 2024-04-08 14:28 GMT

கோப்பு படம் 

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள கோடிகாடு இளந்தோப்பை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 47). இவர் வீட்டில் இருந்தபடியே டி.வி., மிக்சி, மின்விசிறிகளை பழுது நீக்கும் மெக்கானிக் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் வீட்டில் மின்விசிறி ஒன்றை பழுது பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கிருஷ்ணனை மின்சாரம் தாக்கியது. இதை கண்ட அவரது மனைவி கணவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அ

ங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News