வாலிபரை தாக்கிய இருவர் கைது !
உளுந்துார்பேட்டை அருகே வாலிபரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-07 05:13 GMT
காவல் துறை
உளுந்துார்பேட்டை அருகே வாலிபரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை தாலுகா, களவனுார் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் தமிழரசன்,30; இவர், கொரட்டங்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துராமன்,29; என்பவரிடம் ரூ.3 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். கடனை திருப்பி தருமாறு முத்துராமன் கேட்ட நிலையில், பிறகு தருவதாக தமிழரசின் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கொரட்டங்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் தமிழரசன் மது அருந்த சென்றார். அப்போது, அங்கு மது அருந்த நண்பர்களுடன் சென்ற முத்துராமனுக்கும், தமிழரசனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆவேசமடைந்த முத்துராமன் தரப்பினர் தமிழரசனை நிர்வாணப்படுத்தி தடியால் சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதில், படுகாயமடைந்த தமிழரசன் உளுந்துார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து தமிழரசன் அளித்த புகாரின் பேரில், முத்துராமன்,29; மற்றும் ரங்கநாதன் மகன் பிரகாஷ்,30; ஆகிய இருவரை திருநாவலுார் போலீசார் கைது செய்தனர்.