முன்விரோதத்தில் பெண்ணுக்கு அடி, உதை - 2 பேர் கைது
மயிலாடுதுறை அருகே திருமங்கலம் கிராமத்தில் முன் விரோதம் காரணமாக பெண்ணை அடித்து உதைத்து அவமானப்படுத்திய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-05-08 07:47 GMT
பைல் படம்
மயிலாடுதுறை அருகே திருமங்கலம் சண்முகம் மணைவி பவானி(59). இவரது பெண்ணை செண்பகச்சேரியை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் விசுவநாதன் விரும்பியதால் இரண்டு குடும்பத்தாருக்கும் முன் விரோதம் உள்ளது. சம்பவ தினத்தன்று விசுவநாதன் மற்றும் மூர்த்தி மகன் வசந்த் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து பவானி வீட்டுக்கு சென்று அங்கு இருந்த பவானியை அடித்து உதைத்து முடியை பிடித்து கீழே தள்ளி அவமானப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து பவானி அளித்த புகாரின்பேரில் குத்தாலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விஸ்வநாதன், வசந்த் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்