மத போதகரை வாளால் வெட்டிய இரண்டு பேர் கைது
குமரி மாவட்டம் ஆறுகாணியை சேர்ந்த மத போதகரை வாளால் வெட்டிய இருவர் கைது.
Update: 2024-05-18 08:58 GMT
குமரி மாவட்ட மலை கிராமமான ஆறுகாணி பகுதியை சேர்ந்தவர் அருள் தாஸ்.மத போதகரான இவர் பைக்கில் வந்த போது, குமரி கேரளா எல்லையான கண்ணனூர் பகுதியில் நான்கு வாலிபர்கள் வழிமறித்து பணம் கேட்டு தாக்கினர். வாளால் வெட்டியதில் அருள்தாசிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த, ஜெயகு மார் என்பவரது வீடும், பைக்கும் போதை வாலி பர்களால் சேதப்படுத்தப் பட்டன.பின்னர் லிபர்களில் ஒருவர் அரசு பஸ்சிலும், மற்ற மூவர் பைக்கிலும் தப்பிச் சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய வெள்ளறடை போலீசார், பொதுமக்கள் உதவி யோடு பஸ்சில் தப்பிய 17 வயது சிறுவனை மடக்கி பிடித்தனர்மேலும் தலைமறை வான அகில்லால் (22), அபின் ராய் (19), அபி ஷேக்(23) ஆகிய மூவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில், இரவு அகில்லால் மற்றும் அபின் ராயை களியக்காவிளை பகுதியில் கேரளா போலீசார் மடக்கி பிடித்தனர்.தற்போது வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்கள், கஞ்சா கடத் தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக ஏற்க னவே கைது செய்யப்பட் டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மலை பகுதிகளில் கஞ்சா விற்பனை கட்டுப்பாடின்றி நடப்பதாகவும், இருமாநில போலீசார் இணைந்து இளம் சமூகத்தினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.