கேர் நகரில் பணம் வைத்த சூதாடிய இருவர் கைது
கேர் நகரில் பணம் வைத்த சூதாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் மே 18ஆம் தேதி மதியம் 2 மணியளவில், அருகில் உள்ள பள்ளப்பட்டி கேர் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள முள் தோட்டத்தில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட பள்ளப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த அன்சர் அலி பாபு மற்றும் பள்ளப்பட்டி ராஜபேட்டை தெருவை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் வயது 28 ஆகிய இருவரையும் கைது செய்து,அவர்கள் சூதாட பயன்படுத்தி 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 300-யும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.