நெல்லை அருகே குண்டர் சட்டத்தில் இருவர் கைது

நெல்லை அருகே குண்டர் சட்டத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-01-27 11:10 GMT
பாளையங்கோட்டை சிறை

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட பேரின்பராஜ், நாகராஜன் என்ற காக்கா நாகராஜன் ஆகிய இருவரும் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர்.

இவர்கள் கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவில் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News