செய்யாறில் இரண்டு மாட்டு வண்டிகள் மணலுடன் பறிமுதல்

செய்யாறில் இரண்டு மாட்டு வண்டிகள் மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-01-16 10:15 GMT

மாட்டு வண்டி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மணல் அள்ளுவதாக வந்த தகவலை தொடர்ந்து செய்யாறு டிஎஸ்பி சின்னராஜ் ஆலோசனை பேரில் செய்யாறு காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது செய்யாற்று படுகையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகளுடன் காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஓப்படைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News