அரசு பஸ் மீது டிராக்டர் மோதிய விபத்தில் இருவர் பலி

திண்டுக்கல் பழனி நெடுஞ்சாலையில் கோவில் திருவிழாக்கு சென்று விட்டு திரும்பிய போது அரசு பஸ் மீது டிராக்டர் மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-06-22 07:36 GMT
அரசு பஸ் மீது டிராக்டர் மோதிய விபத்தில் இருவர் பலி

விபத்து

  • whatsapp icon

திண்டுக்கல் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சேடப்பட்டியை சேர்ந்த 15 ஆண்கள் திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கதிரையின் குளத்தில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளக்கூடிய கருப்பண்ணசாமி திருவிழாவிற்கு நேற்று காலை ஒரு டிராக்டரில் சென்றனர். நேற்று இரவு திருவிழாவை முடித்துவிட்டு சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் அதே டிராக்டரில் 15 பேரும் சேடப்பட்டிக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

திண்டுக்கல் பழனி நெடுஞ்சாலையில் வந்தபோது திருச்சியில் இருந்து பழனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பெரியண்ணா என்பவர் பலியானார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News