திருப்பூரில் இருதரப்பினர் மோதிக்கொண்டதில் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர் காங்கேயம் சாலையில் இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் சாதிக் பாஷா என்பவரது மண்டை உடைக்கப்பட்டு சாலையில் கடும் வாக்குவாதம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;

Update: 2024-05-11 09:56 GMT

மோதிக் கொண்ட இருதரப்பினர்

 திருப்பூர் மாநகரம்,காங்கேயம் சாலை  சி டி சி பஸ் நிறுத்தம்  அருகே சாலையில் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனங்கள் இரண்டு மோதிக்கொண்டதில்இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது, இதில்  கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து இரு தரப்பினரும்  சண்டையிட்டதில் சாதிக் பாஷா என்பவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.இதன் காரணமாக காங்கேயம் சாலையில் பயணித்த இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனங்கள் ஒட்டுநர்கள் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.சி டி சி கார்னரில் திடீரென இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பகுதியில் இருபுறமும் சாலை விஸ்தரிப்பு பணி மற்றும் சாக்கடை கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் கூடிய பகுதி இந்த நிலையில் திடீரென இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் அங்கு ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News