வீட்டுமனை தகராறில் இருதரப்பினர் மோதல்

வீட்டுமனை தகராறில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட விவகாரத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2024-05-21 16:03 GMT

கோப்பு படம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த மேலப்புலம் புதூர், ராமாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (43) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு அதேப்பகுதியில் வீட்டுமனை உள்ளது. அதேப்பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (64), உரக்கடை நடத்தி வருகிறார்.

இவருக்கும், சுரேசுக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் வெங்கடேசன் கடந்த 18-ந் தேதி பொக்லைன் எந்திரம் மூலம் வீட்டுமனையை சுத்தம் செய்துள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் மற்றும் இவரது மகன் சீனிவாசன் (34), சுரேஷ் மற்றும் இவரது தம்பி ராஜேஷ் ஆகிய இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர்.

Advertisement

இதில் வெங்கடேசன், ராஜேஷ், சுரேஷ் ஆகியோர் காயமடைந்து வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.இதுகுறித்து சுரேஷ் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் அவளூர் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் வெங்கடேசன், சீனிவாசன், சுரேஷ், ராஜேஷ் ஆகிய நான்கு பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி, சரவணமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, சீனிவாசன், ராஜேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News