போதையில் பைக் ஓட்டிய இரண்டு பேருக்கு ரூபாய் 26 ஆயிரம் அபராதம்
தக்கலை பேருந்து நிலையம் அருகே போலீசாரின் வாகன சோதனையின் போது போதையில் பைக் ஓட்டிய இரண்டு பேருக்கு ரூபாய் 26 ஆயிரம் அபராதம் விதித்தனார்.
Update: 2024-03-22 02:30 GMT
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சாமுவேல் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக மது போதையில் வாகனம் ஒட்டி வந்த வடக்கு நுள்ளிவிளை பகுதியை சேர்ந்த ராஜகோபால்,பத்மனாபபுரம் பகுதியை சேர்ந்த விஷ்ணு ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் தக் கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று. பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கைது செய்தனர். தலா ரூ.13,000 வீதம் 2 பேருக்கும் ரூ.26,000 அபராதம் விதித்தனர்.