ஆலிவலத்தில் மண் ஏற்றிய இருவர் கைது
ஆலிவலம் பகுதியில் அரசு அனுமதி இன்றி மண் ஏற்றிய இருவர் கைது செய்யப்பட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-29 10:05 GMT
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்
ஆலிவலம் இலுப்பூர் மாதா கோவில் தெருவில் அரசு அனுமதி இன்றி ஜேசிபி வாகன மூலம் டிராக்டரில் மண் ஏற்றிய செருவாமணி பெரிய குளக்கரை தெருவை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன் மற்றும் கீராலத்துர் கீழ தெருவை சேர்ந்த முருகையன் என்பவரின் மகன் கலைவாணன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அரசு அனுமதியின்றி மண் அல்ல பயன்படுத்திய ஜேசிபி மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.