இரண்டு வாக்கு சாவடி பதிவான வாக்குகள் நிறுத்தி வைக்க உத்தரவு
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் உள்ள ராமானுஜம் புதூர் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இரு வாக்கு சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவுகள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அளிக்கப்படாததால் இரண்டு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் தூத்துக்குடியில் உள்ள அரசு வ உ சி பொறியியல் கல்லூரியில் வைத்து இன்று எண்ணப்பட்டது. இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற போது தூத்துக்குடியில் மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள ராமானுஜம் புதூர் வாக்குச்சாவடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள சிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையம் ஆகிய இரு வாக்குச்சாவடி மையங்களிடம் மாதிரி வாக்குப்பதிவுகளை அளிக்காமல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
இந்த விஷயம் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருக்குமான லட்சுமிபதிக்கு தெரிய வந்ததை தொடர்ந்து இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இந்த இரண்டு வாக்கு சாவடிகளும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு பதிவு இன்று நடைபெற்ற வாக்கு எண்ணும் பணியும் போது என்ன படாமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இரண்டு வாக்குச்சாவடிகளிலும் உள்ள பதிவான வாக்குகள் மாநில தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இரண்டு வாக்குச்சாவடியில் உள்ள பதிவான வாக்குகள் எண்ணப்படாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.