டூவீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

அரவக்குறிச்சி பிரிவுயில் டூவீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-03-02 10:22 GMT
அரவக்குறிச்சி பிரிவு டூவீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, கணக்குவேலம்பட்டி அருகே உள்ள தடா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் வயது 58. இவர் மார்ச் 1-ம் தேதி காலை 11:30 மணியளவில், கரூர்- திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது டூ வீலர் அரவக்குறிச்சி பிரிவு அருகே சென்றபோது, எதிர் திசையில், நாமக்கல் மாவட்டம், திருமலைபட்டி அருகே உள்ள சோலையுடையான் பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுரேந்தர் வயது 26 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், நேருக்கு நேராக நடராஜ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட நடராஜுக்கு, பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த நடராஜ் மனைவி ராஜாமணி, இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த நடராஜ் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான சுரேந்தர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Tags:    

Similar News