இருசக்கர வாகனங்கள் மோதல் - விவசாயி உயிரிழப்பு
Update: 2023-12-03 12:20 GMT
உயிரிழப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஆலடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (70). விவசாயி. இவர் நேற்று முன் தினம் வாழப்பாடி தாலுகா அலுவலகம் சென்று விட்டு சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அருணாச்சலம் உயிரிழந்தார். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.