டூவீலரில் வேகமாக சென்றதால் விபத்து - வாலிபர் படுகாயம்

டூவீலரில் வேகமாக சென்றதால் விபத்தில் வாலிபர் படுகாயம் - காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-03-17 11:34 GMT

காவல்துறை விசாரணை


கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, வாங்கல் அருகே உள்ள மேலசக்கரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் மணிகண்டன் வயது 35. இவர் மார்ச் 14ஆம் தேதி இரவு 9.3/4 மணி அளவில், கரூரிலிருந்து வாங்கல் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது டூவீலர் புதுப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, டூ வீலரை வேகமாக இயக்கியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டனை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த மணிகண்டனின் மனைவி நர்மதா இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், கவனக்குறைவாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.
Tags:    

Similar News