பட்டப் பகலில் இருசக்கர வாகனம் திருட்டு

நாமக்கல் மாவட்டம் கோட்டக்காடு லட்சுமி நகர் பகுதியில் டென்னிஸ் விளையாடச் சென்றவரின் வாகனம் திருடப்பட்ட சிசிடிவி வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது;

Update: 2024-01-19 10:36 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள கோட்டக்காடு லட்சுமி நகர் பகுதியில் , காலை நேர பயிற்சிக்காக டென்னிஸ் விளையாடுவதற்காக வந்த லோகு என்பவர் தனது ஹோண்டா சைன் இருசக்கர வாகனத்தை, மைதானத்தின் பின்புறமாக நிறுத்திவிட்டு, வண்டியில் இருந்து சாவியை எடுக்காமல் மறந்து அப்படியே விட்டுவிட்டு உள்ளே சென்று விட்டார் . சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த பொழுது தனது வண்டி காணாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, எதிரே உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தார்.

Advertisement

அப்பொழுது சுற்றும் முற்றும் பார்த்தபடி வரும் ஒரு இளைஞர் தனது இருசக்கர வாகனத்தை திருடி சென்றதை கண்டறிந்தார். மேலும் இன்னொரு சிசிடிவி காட்சியில் பார்த்த பொழுது தனது வாகனத்தை திருடிச் சென்ற இளைஞருடன் மேலும் இரண்டு இளைஞர்கள் என மொத்தம் மூன்று இளைஞர்கள் தனது வாகனத்தில் செல்வது தெரிய வந்தது. இது குறித்து லோகு பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில்,போலீசார் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள இளைஞர்களின் அங்க அடையாளங்களைக் கொண்டு அவர்களைத் தேடி வருகின்றனர்.பட்டப் பகலில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் இளைஞர் சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோ வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது....

Tags:    

Similar News