டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்- வாலிபர் படுகாயம்
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்- வாலிபர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.;
Update: 2024-03-30 10:11 GMT
காவல்துறை விசாரணை
கரூர் மாவட்டம், வெங்கமேடு, கொங்கு நகர், அண்ணா சாலை, நாலாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு வயது 29. இவர் மார்ச் 28ஆம் தேதி இரவு 9 மணி அளவில், வெங்கமேடு, அம்மன் நகர் பிரிவு, 50 அடி சாலையில் செங்குந்தர் மஹால் அருகே டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, எதிர் திசையில் கரூர், வாங்கபாளையம் பகுதியைச் சேர்ந்த ருகன் வயது 21 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், திருநாவுக்கரசு ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் திருநாவுக்கரசுக்கு முன் நெற்றி மற்றும் மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த திருநாவுக்கரசின் சகோதரி சங்கீதா வயது 26 என்பவர், இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்பட காரணமான ருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.