டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் - சிறுவர்கள் இருவர் உள்பட மூன்று பேர் படுகாயம் ....
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுவர்கள் இருவர் உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். சிறுவர்கள் இருவர் உள்பட மூன்று பேர் படுகாயம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, வீரியம் பாளையம் அருகே உள்ள கைகழுவியூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் முனியப்பன் வயது 24. கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, பிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சந்தோஷ் வயது 17, கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, குப்பாச்சி பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணா வயது 16. இவர்கள் மூன்று பேரும் மார்ச் 26 ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில், லட்சுமணன்பட்டியில் இருந்து இரும்பூதிபட்டி செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர்.
டூவீலரை முனியப்பன் ஓட்ட, சந்தோஷ், குணா பின்னால அமர்ந்து சென்றனர். இவர்களது வாகனம் ஊத்துப்பட்டி பகுதியில் உள்ள செல்வம் வீடு அருகே சென்றபோது, எதிர் திசையில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, வயலூர் அருகே உள்ள திருமேனியூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் சந்திரசேகர் வயது 19 என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், முனியப்பன் ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த முனியப்பன், சந்தோஷ், குணா ஆகிய மூன்று பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக மூன்று பேரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முனியப்பன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்பட காரணமான சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் லாலாபேட்டை காவல் துறையினர்.