உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் பிறந்தநாள்
உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவர் ராஜ்குமார் பிறந்தநாளில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நல உதவிகள் வழங்கினார்;
By : King 24x7 Website
Update: 2024-01-03 05:18 GMT
உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற தலைவர் ராஜ்குமார் பிறந்தநாளில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நல உதவிகள் வழங்கினார்
சேலம் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாவட்ட தலைவரும், 13-வது வார்டு கவுன்சிலருமான ஏ.எம்.எஸ்.ராஜ்குமார் பிறந்த நாள் விழா மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா அஸ்தம்பட்டி வடக்கு சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாநில பொதுச் செயலாளரும், அறங்காவலருமான பி.கே.பாபு தலைமை தாங்கினார். சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அஸ்தம்பட்டி பகுதி தூய்மை பணியாளர்கள் 70 பேருக்கும், மின்சார களப்பணி ஊழியர்கள் 30 பேருக்கும் இலவச வேட்டி சேலை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார். தொடர்ந்து 200 பேருக்கு காலை உணவு வழங்கினார். அதனைத் தொடர்ந்து இரவு 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ஏ.எம்.எஸ்.ராஜ்குமார், கேக் வெட்டி பிறந்த நாளை கட்சி பிரமுகர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கொண்டாடினார்.