மறைந்த இளைஞரணி நிர்வாகி ரூசோ சிலைக்கு உதயநிதி மரியாதை
தேவகோட்டையில் மறைந்த முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரூசோவின் சிலைக்கு உதயநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;
Update: 2024-02-18 05:57 GMT
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் மறைந்த முன்னாள் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ரூசோ சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றி அமைச்சர் உதயநிதி பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில் தலைவருக்கு உறுதுணையாக கட்சி பணியாற்றியவர் ரூசோ. அவர் வழியில் ரூசோவின் மனைவி ஜோன்ஸ்ரூசோவும், மகன் நிஷாந்தும் கட்சி பணி செய்து வருகின்றனர். இதுதான் திமு.க., குடும்ப கட்சி என தி.மு.க.வை கூறுவார்கள். இது போலத்தான் குடும்பம் குடும்பமாக மக்கள் சேவை செய்யவே கட்சி பணிக்கு வருகிறோம், என்றார். ரூசோ இல்லத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெரிய கருப்பன், நகர செயலாளர் பாலமுருகன், இலக்கிய அணி அழகய்யா உட்பட கட்சியினர் பங்கேற்றனர்.