நெல்லைக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின்

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார்.

Update: 2024-02-15 04:27 GMT

பைல் படம்


நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் வருகின்ற 18ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் இல்ல திருமணமும் கேடிசிநகர் மாதா மாளிகையில் வைத்து நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லைக்கு வருகை தர உள்ளார்.அவரை வரவேற்பதற்கு நெல்லை மத்திய மாவட்ட, மாநகர திமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Tags:    

Similar News