சாம்பவா்வடகரையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா
சாம்பவா்வடகரையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-28 10:50 GMT
இனிப்புகள் வழங்கிய திமுகவினர்
தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரை நகர திமுக சாா்பில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. சாம்பவா்வடகரை நகரச் செயலா் முத்து தலைமை வகித்தாா். முன்னாள் நகரச் செயலா் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். செங்கோட்டை ஒன்றிய திமுக செயலா் ரவிசங்கா், சாம்பவா்வடகரை மத்தி தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், திமுக நிா்வாகிகள் ஆறுமுகம், பட்டுமுத்து, சந்திரன், முத்துக்குமாா், செல்வின் அப்பாத்துரை, ஐயப்பன், அணைந்தபெருமாள், காதா் மைதீன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.