யு.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா!
திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டு பள்ளியில் யு.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
Update: 2024-03-25 09:08 GMT
பட்டமளிப்பு விழா
திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டு பள்ளியில் யு.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் தாத்தா, பாட்டிகள் தினவிழா பள்ளி தலைவர் ஆர்.குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. பள்ளி நிர்வாகி டி.எஸ்.சவிதா, முதல்வர் எஸ்.தேன்மொழி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பட்டயச் சான்றிதழை வழங்கினர்.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.