யு.கேஜி மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழாவில் யுகேஜி மாணவ மாணவிகள் முதலிடம்.;
Update: 2024-03-17 12:05 GMT
பட்டமளிப்பு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவியில் உள்ள துரை மாடர்ன் பள்ளி (சி.பி.எஸ். இ)யில் யு.கே.ஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார், பள்ளி ஆசிரியர் அகிலா வரவேற்புரை ஆற்றினார். தலைமை விருந்தினராக பள்ளி நிறுவனர் மணி கலந்து கொண்டார் மற்றும் பள்ளி நிர்வாக இயக்குனர் சிந்து, பள்ளி முதல்வர்முனைவர் ரவிந்தர் முன்னிலை வகித்தனர். இரண்டு ஆண்டுகள் படிப்பை முடித்த கே.ஜி மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினர்.பள்ளியில் அனைத்திலும் சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் செய்தனர். விழா முடிவில் பள்ளி ஆசிரியர் ரூபா நன்றி உரை கூறினார்.