இரயில் பயணியிடம் கணக்கில் வராத பணம் ரூ.29 லட்சம் பறிமுதல்

விருதுநகர் இரயில் நிலையத்தில் பயணியிடம் கணக்கில் வராத ரூ.29 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருமானவரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2023-11-02 05:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஹவுரா - கன்னியாகுமரி விரைவு இரயிலில் விருதுநகரில் இரயில்வே போலீசார் போதைப் பொருள் சோதனை நடத்தினர். மதுரையை சேர்ந்த சம்பாஜி(55) என்பவர் கொண்டு வந்த பையில் போதைப் பொருள் உள்ளதா என்று சோதனையிட்டனர்.அதில் ரூ.29 லட்சம் பணம் இருந்தது. இது குறித்து அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.அதை தொடர்ந்து விருதுநகர் இரயில்வே போலீசார் அவரை பிடித்து இருப்புபாதை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகர்கோவிலைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் கோலப்பன் என்பவர் மதுரையில் நிவாஷ் என்பவரிடம் உருக்கிய தங்கத்தை கொடுத்ததாகவும், அதற்குரிய பணத்தை சம்பாஜியை பெற்று வரச் சொன்னதாகவும் தெரிய வந்தது. இதனையடுத்து விருதுநகர் இரயில்வே போலீசார் பணத்தை வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் காட்டப்பட்டால் அப்பணம் நகைக்கடைகாரரிடம் ஒப்படைக்கப்படும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News