கலெக்டர் அலுவலக சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணி 

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Update: 2024-06-16 11:02 GMT

கலெக்டர் அலுவலக சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணி 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ரூபாய் 129.95 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 90 சதவீத பணிகள் முடிந்து விட்டது. 35 வார்டுகளில் பாதாள சாக்கடைகட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் 18 வார்டுகளில் முழுமையாகவும், 17வாடுகளில் பகுதி வாரியாகவும் பணிகள் நடந்துள்ளது. குறிப்பாக கலெக்டர் அலுவலக சாலையில் பால்பண்ணை சந்திப்ப முதல் டெரிக் சந்திப்பு வரை  பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்தது.      

இந்த சாலையில் இன்னும் போக்குவரத்து தொடங்கவில்லை. இதனை தொடர்ந்து டெரிக்  சந்திப்பில் இருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை சாலையில் பாதாள சாக்கடை பணிகளை தொடங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் பணிகள் குறித்து மேற்கொள்ள போக்குவரத்து காவல்துறையின் அனுமதி நடப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறை அனுமதி கிடைத்ததும் போக்குவரத்தை மாற்றிவிடப்பட்டு, தொடர்ந்து சாலைகளில் பள்ளங்கள் தோன்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News