உரிய ஆவணமில்லாத ரூ. 61 ஆயிரம் பறிமுதல்

பெரம்பலூரில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.61 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-25 09:22 GMT
பெரம்பலூர் அடுத்துள்ள குரும்பலூரில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 61 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினார்கள். பெரம்பலூர் அடுத்துள்ள குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில் தேர்தல் பறக்கும் படை குழுவினரான குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் பிரேமஜெயம் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்து வாகனத்தில் திட்டக்குடி ,தெற்கு தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் செந்தில் ராஜா 32 என்பவர், உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ௹ 61,000 பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News