ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 63 ஆயிரம் பறிமுதல் !
ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 63 ஆயிரம் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-27 07:10 GMT
ரூ. 63 ஆயிரம் பறிமுதல்
கெங்கவல்லி: சேலம் மாவட்டம்கெங்கவல்லி அருகே லத்துவாடியில் நேற்று மாலைதுணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சிபகுதியைச் சேர்ந்த முகமது கனி என்பவர் தனதுமோட்டார் சைக்கிளில் வந்தார். அவர், எந்த விதமான ஆவணமும் இன்றி ரூ.63 ஆயிரத்து 700-ஐ கொண்டுவந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு வரப்படும் பணத்துக்கு உரியஆவணம் இல்லாததால் அவரிடம் இருந்து ரூ. 63ஆயிரத்து 700-ஐ போலீசார் பறிமுதல் செய்து,கெங்கவல்லி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.