தூர்வாரப்படாத கால்வாய் - எஞ்சின் மூலம் மழைநீர் வெளியேற்றம்

மயிலாடுதுறை அருகே கனமழையால் வயலில் சூழ்ந்த மழைநீர் வடியாததால் என்ஜினை வைத்து மழைநீரை விவசாயிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-01-09 12:12 GMT

கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டு கடந்த சனிக்கிழமை அன்று அறுவடை பணிகள் துவங்கியது. அன்றே மழையும் துவங்கியதால் அறுவடை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்த கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் கதிர் வளர்ந்து வந்த பயிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதல் மழை இல்லாத நிலையில் விவசாயிகள் வயல்களில் சூழ்ந்த மழை நீரை வடியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருவாழக்கரை கிராமத்தில் உள்ள பூவேந்தன் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் 200 ஏக்கருக்கு மேல் பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது. வயலில் சூழ்ந்த மழைநீரை வடியவைக்க முடியவில்லை.கருப்பு கொடியேந்தி வாய்காலை தூர்வாரத பொதுப்பணித்துறையினரை கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகள், தொடர்ந்து எஞ்ஜின் மோட்டாரை கொண்டு வயலில் வடிய வழியின்றி தேங்கிய தண்ணீரை நீண்ட குழாய்கள் மூலம் வாய்க்காலின் மற்றொரு பகுதியில் இறைத்து வருகின்றனர். உடனடியாக வாய்க்காலை தூர்வாரி தங்களின் துயர் துடைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News