குமரியில் தடங்கலின்றி படகு போக்குவரத்து: அதிகாரிகள் தகவல்

Update: 2023-10-30 12:34 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி கடலில் பவுர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் கடலில் நிகழும் இயற்கை மாற்றங்களின் காரணமாக கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து அடிக்கடி தடைபட்டு வருகிறது.        ஆனால் தற்போது பவுர்ணமி முடிந்து 2 நாட்கள் ஆன பிறகும் கன்னியாகுமரி கடலில் எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை.

இதுபற்றி தமிழ்நாடு கடல் சார் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:- நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாத காலமும் வடகிழக்கு பருவக்காற்று காலம் ஆகும். இந்த வடகிழக்கு பருவக்காற்று காலத்தில் கன்னியாகுமரி கடலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற நாட்களில் எந்தவித இயற்கை மாற்றங்களும் நிகழ வாய்ப்பு இல்லை. ஏதாவது புயல், மழை காலங்களில் மட்டும் இயற்கை மாற்றங்கள் நிகழலாம்.

தற்போது வடகிழக்கு பருவக்காற்று சீசன் தொடங்கி உள்ளதால் கன்னியாகுமரி கடலில் சாதகமான சூழ்நிலை நிலவிவருகிறது. இதனால் கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பவுர்ணமி காலமான தற்போது எந்தவித தடங்கலும் இன்றி படகு போக்குவரத்து தொடர்ச்சியாக நடை பெற்று வருகிறது. இந்த சாதகமான சூழல் வருகிற ஜனவரி மாதம் வரை 3 மாதகாலம் நீடிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த 3 மாத காலமும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு எந்தவித தடங்கலும் இன்றி படகு போக்குவரத்து தொடர்ச்சியாக நடைபெறும் என்று நம்புகிறோம் இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Tags:    

Similar News