அடையாளம் தெரியாத வாகனம் மாேதி தனியார் நிறுவன காவலாளி பலி!
தூத்துக்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மாேதி தனியார் நிறுவன காவலாளி உயிரிழந்தார்.
Update: 2023-12-17 06:38 GMT
தூத்துக்குடி மணிநகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் முருகன் (72). இவர் மடத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தூத்துக்குடி துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.