செஞ்சி ஒன்றியக்குழு கூட்டம்

செஞ்சியில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்துதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2024-02-08 07:35 GMT

  செஞ்சியில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்துதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

இதற்கு ஒன்றியக்குழு தலைவர் வக்கீல் விஜயகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீத்தாலட்சுமி, முல்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் ஒன்றிய பகுதியில் குடிநீர் குழாய் வசதி, திறந்த வெளி கிணற்றுக்கு மூடி அமைத்தல் போன்ற பணிகளை மேற் கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், ஸ்பெயின் நாட்டுக்கு சென்று தமிழ்நாட்டின் வளர்ச் சிக்காக முதலீடுகளை பெற்றுக்கொண்டு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் ஜெயபாலன், கவுன்சிலர்கள் பச்சையப்பன், அன்னம்மாள், சாவித்திரி, டிலைட் ஆரோக்கியராஜ், கேமல், துரை, சீனி வாசன், முரளி, மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News