விஜயகாந்த் மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல்

விஜயகாந்த் மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-28 10:29 GMT

நீலகிரி மாவட்டம் உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கெள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வருகை புரிந்தார்.

அப்போது விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். மரியாதைக்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தமிழக அரசியல் மட்டுமின்றி ஒரு சிறந்த நடிகராக, ஒரு தேசப்பற்றுள்ள நடிகராக குறிப்பாக அவருடைய திரைப்படங்கள் அனைத்தும் நாட்டுக்கு ஒரு சேவை செய்கின்ற திரைப்படங்கள்,

ஒரு நல்ல காவல்துறை அதிகாரியான திரைப்படங்கள் அப்படி திரைப்படம் மூலமாக ஒரு மிகப்பெரிய தலைவராக ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் மரியாதைக்குரிய திரு விஜயகாந்த். அண்ணன் விஜயகாந்த் அவர்களுடைய இறப்பு செய்தியானது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய பாதிப்பு. அவருடைய குடும்பத்தினருக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், விஜயகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

ஐயா விஜயகாந்த் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறன்.

Tags:    

Similar News