பாதுகாப்பற்ற சாலை விரிவாக்க பணி - விபத்தில் சிக்கிய இளைஞர்

Update: 2023-11-06 07:56 GMT
பள்ளத்தில் விழுந்த இளைஞர் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி செல்லும் இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 296 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது, இதில் 50 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் சாலையில் உள்ள பாலங்களை விரிவாக்குவதற்கு ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் இவ்வாறு தோண்டப்படும் பள்ளங்களுக்கு அருகே முறையான எதிரொலிப்பான் இல்லாத காரணமாக அடிக்கடி விபத்துகளும் நிகழ்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர், இந்த நிலையில் குருவம்மாபேட்டை கிராமத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மன்னார்சாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது பாலத்திற்காக எடுக்கப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளார், இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், இதில் அவர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார், மேலும் பெரிய பள்ளத்தில் விழுந்த இருசக்கர வாகனத்தை மீட்கும் பணியிலும் பொதுமக்கள் ஈடுபட்டனர். சாலை விரிவாக்க பணியில் முறையான வழிமுறைகளை பின்பற்றதால் பலரும் விபத்தில் சிக்கி வருகின்றனர், மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  பிரம்மதேசம் அருகே உள்ள பாலத்தில் இளைஞர் ஒருவர் விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News