புனரமைக்கப்பட்ட சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூண் திறப்பு
தர்மபுரி சந்தைப்பேட்டை பகுதியில் பராமரிப்பின்றி இருந்த சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூண் புனரமைக்கப்பட்டு ஆட்சியரால் திறந்து வைக்கப்பட்டது.
Update: 2024-06-30 01:55 GMT
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆய்வின் போது சந்தைப்பேட்டை பகுதியில் பராமரிப்பின்றி ஆக்கிரமிப்புடன் காணப்பட்ட வரலற்றுச் சின்னமான சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூண் அடையாளம் காணப்பட்டு, ஆக்கிரமிப்பினை அகற்றி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்திற்கு உத்திரவிட்டார். அதனை தொடர்ந்து வங்கியின் ஒத்துழைப்புடன், தருமபுரி நகராட்சி நிர்வாகத்தால் புனரமைக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி திறந்து வைக்கப்பட்டது. எவ்வித ஆக்கிரமிப்பும் இன்றி வரலாற்றுச்சின்னத்தை பாதுகாத்து வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டியது நம் அனைவரின் தலையாய கடமையாகும் என்று தெரிவித்து நகராட்சி சார்பில் முறையாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். உடன் நகராட்சி ஆணையாளர் புவனேஷ்வரன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.