பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-12-31 15:40 GMT
கோப்பு படம் 

ஒன்றிய பாஜக அரசு, தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, பெட்ரோல் - டீசல் விலையை பாதியாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத் தலைவர் மல்லிப்பட்டினம் தாஜுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது,   மன்மோகன்சிங் தலைமையில், ஐக்கிய முன்னணி ஆட்சியில் இருந்த போது கச்சா எண்ணெய் பீப்பாய் டாலர் 160 வரை உயர்ந்த போதும் பெட்ரோல் லிட்டர் ரூ.60க்கும், டீசல் ரூ.52 க்கும் விற்பனையானது.  மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சிப் பொறுப்பேற்ற 2014 முதல், தற்போது வரை பீப்பாய் டாலர் 140 லிருந்து 71 டாலர் வரை குறைந்துள்ளது.  கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பாஜக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் டீசலை பெரிதும் உபயோகப்படுத்தும் மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

விலை ஏற்றத்தால் எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றது. பொது மக்களின் செலவீனங்கள் கூடி பொருளாதார நட்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  கார்ப்பரேட் முதலாளிகளைத் தவிர, அனைத்து இந்திய குடி மக்களும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாரதிய ஜனதா அரசு தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைத்து வழங்கப்படும் என்று தெரிவித்தபடி, தற்போது பீப்பாய் 87 டாலராக உள்ள கச்சா எண்ணெய் விலையை கணக்கில் கொண்டு டீசல் லிட்டர் ரூ.50 க்கும், பெட்ரோல் ரூ.58க்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News